கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் வருகிற மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாயிகள் சிறு தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் தாலுகா பகுதிகளில், மரச்சிற்பங்கள் செய்வது பிரதான தொழிலாகும். இந்தத் தொழிலில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.
ஊரடங்கு எதிரொலியால் கடந்த ஒருமாத காலமாக வேலை இல்லாத காரணத்தினால், வாழ்வாதாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாக மரச்சிற்பக்கலைத் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வருகிற ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் தாங்கள் மீண்டும் தொழிலில் ஈடுபடுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: போன் செய்தால் வீட்டிற்கே வந்து பணியைக் கச்சிதமாகச் செய்துமுடிக்கும் முடித்திருத்துநர்கள்!