இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் 57 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 50 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே மருத்துவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே மக்களின் அவசியம் புரிந்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவுத் துறை மொத்த விற்பனை பண்டகசாலை மூலமாக நடமாடும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனையை தொடங்கியுள்ளது.
இதன் மூலம் மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கிச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கட்டுக்குள் வந்த காய்கறி விலை