பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்துக்கும் சத்தியகீர்த்தி என்பவருக்கும் தீபாவளியன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது நண்பர்களான கண்ணதாசன், சதீஷ் செல்வம், செந்தில் குமார் ஆகியோரை அழைத்து வந்த சத்தியகீர்த்தி, அரவிந்த், குமார், ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் இரும்பு கம்பிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மூவரும் பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் அரவிந்த் மற்றும் குமார் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, பெரம்பலூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசன், சதீஷ் செல்வம், செந்தில் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
தலமைறைவாகவுள்ள சத்தியமூர்த்தியை தேடிவந்த நிலையில், சத்தியகீர்த்தியின் உறவினரான முருகேசன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். காவல் துறை செய்து விடுவதாக மிரட்டியதால் தான் முருகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று கூறி முருகேசனின் உறவினர்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த இரு தரப்பு மோதலுக்கு காரணமானவர்கள் என்று காவல்துறை கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அப்பாவி பொதுமக்களை அடிக்கடி மிரட்டி கைது செய்யும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த மழை!