பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் கடந்த ஓராண்டாக கற்றாழை ஜூஸ் கடை நடத்திவருபவர் மணிகண்டன். இவர் கரோனா வைரஸ் (தீநுண்மி) தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இலவசமாகக் கற்றாழை ஜூஸ் வழங்கிவருகிறார்.
கரோனா தீநுண்மி தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றும், பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும்விதமாக, தன்னால் முடிந்ததைச் செய்வதாகவும், இது ஊரடங்கு முடியும்வரை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இவரின் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குணமடைந்தவர்களை பழங்கள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய எம்.எல்.ஏ.