ETV Bharat / state

அதிமுக அரசு ஹாட்ரிக் அடிக்கும் - வெல்லமண்டி நடராஜன் - வெல்லமண்டி நடராஜன்

பெரம்பலூர்: தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான அரசு மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தும் அதிமுக தலைமையிலான அரசுதான் -வெல்லமண்டி நடராஜன்!
author img

By

Published : Nov 20, 2019, 11:03 PM IST

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருதையான் கோயில் தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் சார்பாக 1896 பயனாளிகளுக்கு ஆறு கோடியே 35 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் அடுத்தும் அதிமுக தலைமையிலான அரசுதான் -வெல்லமண்டி நடராஜன்!

விழாவில் பேசிய தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பான ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு மீண்டும் ஆட்சியமைத்து ஹாட்ரிக் சாதனையுடன் பொற்கால ஆட்சியை நடத்தும்" என்று தெரிவித்தார்

இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!

Intro:தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு மீண்டும் பொற்கால ஆட்சி அமைப்பதற்கு ஹாட்ரிக் சாதனையாக மூன்றாவது முறை ஆட்சி அமைக்க பெற வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கண் தூங்காது களப்பணியாற்றி கொண்டிருப்பதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெரம்பலூரில் பேச்சு

Body:மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருதையான் கோவில் தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருவாய் துறை ஊரக வளர்ச்சித்துறை கால்நடை பராமரிப்பு துறை வேளாண்மைத் துறை மகளிர் திட்டம் தோட்டக்கலை துறை தாட்கோ மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் சார்பாக 1896 பயனாளிகளுக்கு 6 கோடியே 35 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தொடர்ந்து இந்த விழாவில் பேசிய வெல்லமண்டி நடராஜன் தமிழகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நல்ல பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பான ஆட்சி செய்து வருகிறோம் என்றும் மீண்டும் பொற்கால ஆட்சி ஹாட்ரிக் சாதனையாக மூன்றாவது முறை ஆட்சி அமைக்க பெறவேண்டும் என்பதற்காக அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் களப் பணியாற்றி வருகிறோம் என்று என்று பேசினார் மேலும் நல்ல பல திட்டங்களை அதன் காரணமாக இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது சக்தியாக தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும் என்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்

Conclusion:இந்த நிகழ்வில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி ராமச்சந்திரன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.