பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய இரு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ், பெறப்பட்ட மனுக்களின் மீது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறைமங்கலம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு 2,969 பயனாளிகளுக்கு ரூ. 11 கோடியே 54 லட்சத்து 34ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ' தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும். அதுபோல எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தொடர்ச்சியாக நல்ல பல திட்டங்களை மக்களுக்கு அறிவித்து ஆட்சி செய்ததைப் போல, தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது' என்றார்.
இதையும் படிங்க:'ரஜினி கூறிய அதிசயம் நடக்கும்' - அமைச்சர் பென்ஜமின்