பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவர், கடந்த 18 ஆண்டுகளாக துபாயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்துவந்தார்.
இதனிடையே, கடந்த வாரம் மதுரை வீரன் உயிரிழந்து விட்டதாக அங்குள்ள நண்பர்கள் மூலம் அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆனால், கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தனது கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மதுரை வீரனின் மனைவி லெட்சுமி, அவரது உறவினர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதையும் படிங்க: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு!