பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள குரும்பலூரில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 2019-20ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட்டன.
இந்நிலையில் பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். இன்று மட்டும் இந்த அரசுக் கல்லூரியில் 150-க்கும் மேற்பட்டோர் வாங்கி சென்றுள்ளனர் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மே 17ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகமும், கல்லூரியில் சேர்வதற்கு மே 20, 21, 22 மற்றும் 24 ஆகிய நான்கு நாட்கள் கலந்தாய்வும் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.