பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 20 வருடத்திற்கு முன்பு பயின்ற மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இந்த விழாவை நினைவூட்டும் விதமாக பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளும் நட்டனர். இதைதொடர்ந்து அனைத்து மாணவர்களும் இணைந்து குழுப் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.