பெரம்பலூர்: அருகே சிறுவாச்சூர் சந்தையானது பெயர் பெற்ற ஆட்டு சந்தையாகும். இந்த ஆட்டு சந்தைக்கு அரியலூர், கள்ளகுறிச்சி, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆட்டு வியாபாரிகள் விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்தனர்.
பொங்கல் பண்டிகைக்காக ஏராளமான பொதுமக்கள் வாங்கி செல்வதற்காக வருகை தந்தனர். ஆடுகள் ரூ.5000 முதல் ரூ.15000 வரைக்கும் விற்கப்பட்டது. இன்று 1500 ஆடுகள் ரூ.1 கோடிக்கு விற்பனை ஆனது. இருப்பினும் பொங்கல் பண்டிகை என்பதால் அதிக விலைக்கு ஆடுகள் விற்கப்பட்டதாகவும், வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்ற வாரத்தோடு இந்த வாரத்தில் ஆடுகள் அதிக விற்பனையாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:Jasmine flower price: மல்லிகைப் பூ விலை கிடுகிடு உயர்வு: கிலோ எவ்வளவு தெரியுமா?