பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரைச்சந்தித்து மனு அளிக்க பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அலுவலகம் முன்பு காத்திருந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ”விளையாட்டு விடுதி மேலாளராக உள்ள ஜெயக்குமாரி, விடுதி மாணவிகளின் அறையில் தங்கிக்கொண்டு, தனக்கு உண்டான துணி துவைப்பதும், செருப்பு கழுவுவது, கழிவறைகளை சுத்தம் செய்வதும் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் மாணவிகளை வைத்து செய்யச்சொல்லி கொடுமை செய்து வருகிறார்.
மேலும், இதில் ஒரு மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் மன நோயாளியாக மாற வாய்ப்புள்ளது. ஆகையால், கவனமாக பார்த்துக் கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளார். மாணவிகளுக்கு அரசு தரும் உதவித்தொகையும் சரிவர வழங்குவதில்லை. நல்ல உணவுகள் கொடுப்பதில்லை.
மேலும், மாணவிகளிடம் ஆபாசப் படங்களைக் காட்டி தேவையில்லாத பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும், உள்ள விஷயங்களை, மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களது பிரச்னைகளை நேரில் கூறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை, குறிப்பிடப்பட்டிருந்த மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். இந்த மனு வழங்கும் நிகழ்வின்போது விடுதி மாணவிகள் பெற்றோர் பலர் உடனிருந்தனர்.