ETV Bharat / state

'புவிசார் குறியீடு எங்கள் கனவு' - நிறைவேறிய பூரிப்பில் அரும்பாவூர் மரச் சிற்பக் கலைஞர்கள்!

author img

By

Published : May 14, 2020, 4:16 PM IST

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலுள்ள பழமையான தேர்கள் அரும்பாவூர் மர சிற்பக் கலைஞர்களின் கைவண்ணமே. அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதால், கலைஞர்கள் அனைவரும் பூரிப்படைந்துள்ளனர்.

புவிசார் குறியீடு
புவிசார் குறியீடு

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச் சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. 1970ஆம் ஆண்டு அரும்பாவூர் மரச் சிற்பங்கள் செய்வோர் தொழில் கூட்டமைப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு அரும்பாவூர் திருத்தேர், மரச் சிற்பக் கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் முருகேசன், குழு உறுப்பினர்கள் ஆகயோர் புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்தனர். அதன் பலனாக, மத்திய அரசு அரும்பாவூர் மரச் சிற்பங்களை புவிசார் குறியீடாக அங்கரீத்துள்ளது.

அரும்பாவூர் மர சிற்பங்கள்
அரும்பாவூர் மர சிற்பங்கள்

அரும்பாவூர் சிற்பக் கலைஞர்கள்

தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில் தேர்களின் கலை வேலைப்பாடுகளைச் செதுக்கியவர்கள் அரும்பாவூர் சிற்பிகள் தான். இறைவழிபாடு சார்ந்த சிற்பங்கள், சாமியை ஊர்வலமாகக் கொண்டுசெல்லும் வாகனமான தேர் என அனைத்தையும் கலை வேலைப்பாடுகளுடன் செய்வதில் தனித்துவம் வாய்ந்தவர்கள். பாரம்பரியமாகச் செயல்பட்டுவந்த இத்தொழிலில் தொடக்கக் காலகட்டத்தில் 500க்கும் அதிகமான தொழிலாளிகள் ஈடுபட்டுவந்தனர். ஆனால், தொழில்நுட்ப யுகத்தில், அவர்களின் எண்ணிக்கை 150ஆக குறைந்துள்ளது.

அரும்பாவூர் மர சிற்பங்கள்
அரும்பாவூர் மர சிற்பங்கள்

அரும்பாவூர் மரச் சிற்பத் தொழிலாளர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று, தேரினை மிக நுட்பமாக வடிவமைப்பவர்கள். இதற்காக, அந்தந்த கோயில்களில் தங்கி அசைவத்தைத் தவிர்த்து, தேரினை உருவாக்குவார்கள். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பழமையான தேர்கள் அரும்பாவூர் மரச் சிற்பக் கலைஞர்களின் கைவண்ணமே.

அரும்பாவூர் திருத்தேர், மரச் சிற்பக் கலைஞர்கள் நலச் சங்கத் தலைவர் முருகேசன் கூறும்போது, ”புவிசார் குறியீடு எங்கள் கனவு. அது நிறைவேறியது மகிழ்ச்சியை அளிக்கிறது. பூம்புகார் நிறுவனத்திற்கு நன்றி” என மனம் பூரித்தார்.

அரும்பாவூர் மரச் சிற்பக் கலைஞர்களின் புவிசார் குறியீடு

இது குறித்து மரச் சிற்பக் கலைஞர் வாசுதேவன், “சிவன், லெட்சுமி, சரஸ்வதி என ஒவ்வொரு சிலையையும் ஒரு அடி முதல் 12 அடி வரை வடிவமைக்கிறோம். தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இந்தத் தொழிலில் சரியான சந்தைப்படுத்துதல் இல்லாமையால், மக்கள் இதிலிருந்து விலகிவிட்டனர். புவிசார் குறியீடு இனிவரும் காலங்களில் அவர்களை ஒன்றிணைக்கலாம்” என்றார்.

இதையும் படிங்க: அரசு கூறியது போல 'இரட்டிப்பு சம்பளம்' வழங்க வேண்டும் - ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.