ETV Bharat / state

சர்வதேச போட்டியில் பங்கேற்க நிதி திரட்டும் தேசிய கபடி வீரர் - சர்வதேச அளவிலான கபாடி போட்டி

பெரம்பலூர்: சர்வதேச அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் இளம் வீரர் குடும்ப சூழ்நிலை காரணமாக ஊர் பொதுமக்களிடையே நிதி திரட்டும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

National Kabaddi Player
National Kabaddi Player
author img

By

Published : Jan 28, 2020, 10:31 AM IST

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணாநிதி(20). இவர் பெரம்பலூரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். கபடி போட்டியில் சிறுவயது முதலே ஆர்வம் கொண்ட இவர், கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு தேர்வு பெற்றார்.

இதனைத்தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய குணாநிதி, இறுதிப்போட்டியில் அரியானா மாநிலத்தோடு வெற்றி பெற்றதன் மூலமாக தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அடுத்த மாதம் நேபாள நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிக்கு இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.

ஆனால் இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக நேபாள நாட்டிற்கு செல்வதற்கான பணமில்லாததால், தனது நண்பர்கள், ஊர் பொதுமக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டோரிடம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கான நிதி நெருக்கடியை அரசு போக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மறைந்தார் 'பிளாக் மாம்பா' - கண்ணீரில் ரசிகர்கள்!

Intro:சர்வதேச அளவில் கபாடி போட்டியில் பங்கேற்கும் பெரம்பலூர் மாவட்ட வீரருக்கு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் நிதி உதவி

Body:பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணாநிதி வயது 20 இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார் கபடி போட்டியில் சிறுவயது முதலே ஆர்வம் கொண்ட இவர் கடந்த மாதம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டி யில் தேர்வு பெற்ற அவர் அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தேர்வு பெற்றார் இதனை இதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி இறுதிப்போட்டியில் அரியானா மாநிலத்தோடு மோதி வெற்றி பெற்று தெரிவுசெய்யப்பட்டார் இதன்மூலம் அடுத்த மாதம் நேபாள நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிக்கு இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார் இந்த கபடி வீரர் இவரது குடும்ப சூழ்நிலையில் உள்ளதால் நேபாள நாட்டிற்கு செல்வதற்கான நிதி திரட்டி வருகிறார் இதனிடையே பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந் தலைவர் சாந்தா தேவகுமார் ரூபாய் 5000 நிதி உதவி செய்தார்

Conclusion:மேலும் இன்னும் நிதி உதவி தேவைப்படுவதால் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.