பெரம்பலூர் மாவட்டம் சித்தளி, பாடலூர், களரம்பட்டி, வடகரை , வெண்பாவூர், முருக்கன்குடி உள்ளிட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவிலும் உள்ளது.
இந்த வனப்பகுதியில் மான்கள், மயில்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதிகளில் இருந்து மான்கள் தண்ணீர், உணவு தேடி சாலையை கடந்து ஊர்களுக்குள் வருகிறது. இதனால் வாகனங்களில் அடிப்பட்டு 50க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்து போயுள்ளன.
இதனையடுத்து மான்களுக்கு வனப்பகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டுமென வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தாணிப்பாறை வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு?