தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் நிலையில் பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான பத்மஜா தலைமையில் நடைபெற்றது. இப்பணியினை இன்று (மார்ச் 29) அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
மேலும் பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 428 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணியும், இதேபோன்று குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சங்கர் தலைமையில் குன்னம் தொகுதியில் உள்ள 388 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியும் நடைபெற்றுது.
இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல்: சென்னையில் 265 வழக்குகள் பதிவு!