பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள உணவகங்கள், உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், தனியார் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் பாஸ்ட் டாக் பயிற்சி முகாம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த முகாமில் இந்திய உணவுப் பாதுகாப்பு, தரநிர்ணய ஆணையத்தின் பதிவுபெற்ற பரிக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சிக்கு உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சவுந்தரி தலைமை வகித்தார். உணவு உற்பத்தி செய்யும் இடங்களைச் சுகாதாரத்துடன் வைத்துக்கொள்வது, சுகாதாரமான முறையில் உணவுப் பொருள்களைத் தயாரிப்பது, உற்பத்தி செய்த உணவுப் பொருள்களைப் பாதுகாப்பான முறையில் நுகர்வோருக்குக் கொண்டுசேர்ப்பது உள்ளிட்ட பலவகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும் உணவு கலப்படத்தை எளிதில் கண்டறியும் முறைகள் குறித்தும், உணவுப் பொருள்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய தரநிர்ணயம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சௌமியா சுந்தரி உணவு தயாரிப்பு நிறுவனங்களில், சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்டால் முதல் இரண்டு முறை இந்த எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் எனவும் அதன் பின்னரும் குறைபாடு தொடர்ந்தால் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'காவலன் SOS' செயலிக்கு காவல் துறையின் தெறிக்கவிடும் மீம்ஸ்!