ETV Bharat / state

விதைப்பு பணிக்காக நிலத்தை தயார்படுத்தும் விவசாயிகள் - perambalur news

பெரம்பலூர்: வைகாசி மாதம் தொடங்கியதால் சின்ன வெங்காய விதைப்பு பணிக்காக நிலத்தை விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர்.

நிலத்தை தயார் படுத்தும் விவசாயிகள்
நிலத்தை தயார் படுத்தும் விவசாயிகள்
author img

By

Published : May 19, 2020, 1:53 PM IST

விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது பெரம்பலூர் மாவட்டம். இம்மாவட்டத்தில் மழையை நம்பியே பெருவாரியான மானாவாரி நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், சிறு தானிய வகைகள், பூக்கள் சாகுபடி நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் வைகாசி பட்டத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிகுளம், ஆலத்தூர், நாட்டார்மங்கலம், சத்திரமனை வேலூர், செஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நிலத்தை உழுது தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்போதும் சின்ன வெங்காயத்தை வைகாசி மாதம் பயிரிட்டு அதனை ஆடி மாத இறுதியில் சாகுபடி செய்து பட்டரை போட்டு பாதுகாக்கப்படும். அதேபோல் தற்போது நிலத்தை உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர்.

நிலத்தை தயார் படுத்தும் விவசாயிகள்
நிலத்தை தயார் படுத்தும் விவசாயிகள்

மேலும் தாங்கள் விவசாயப் பணியை தொடங்கியிருந்தாலும் மழை கை கொடுத்தால் மட்டுமே தங்களுக்கு சாகுபடி ஏற்றதாக அமையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இம்மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டார பகுதிகளில் அதிக அளவு சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொழில்துறை நிறுவனங்கள் எப்போது செயல்படலாம்? டெல்லி அரசு விளக்கம்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.