கோவிட்-19 பெருந்தொற்றினால் இந்தியாவில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அதனைக் கடைப்பிடிக்குமாறு அரசுத் தரப்பில் வேண்டுகோள்விடப்பட்டுள்ளது. மேலும் இதில் காய்கறி, இறைச்சி, பால், உணவு ஆகிய பொருள்களுக்கு மட்டும் விதிவிலக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஊழவர் சந்தை, தினசரி சந்தைகளில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்த பிறகே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தா இன்று நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது சந்தையில் காய்கறிகள் வாங்க வருவோர் இடைவெளி விட்டு நிற்க கட்டம் போடப்பட்டுள்ளதா, பொதுமக்களுக்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறதா உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்தார்.
இதையும் படிங்க:டெல்லி சிஏஏ போராட்டத்திற்கு சென்ற ஏழு பேருக்கு கரோனா