இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 20ஆம் தேதி காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண் சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருள்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் குறித்த முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.
விவசாயிகள் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.
கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தவிர்த்து வேறு வட்டார அலுவலகத்திற்குச் செல்ல வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.