ETV Bharat / state

பெரம்பலுார் தொகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

author img

By

Published : Apr 17, 2019, 6:07 PM IST

பெரம்பலூர்: நாளை நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலுார் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தா முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

perambur constituency

தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 18) நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதனிடையே வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று அனுப்பிவைக்கப்பட்டன.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் உள்பட மொத்தம் 996 இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவிற்குத் தேவையான பொருட்கள் ஆகியவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வே சாந்தா முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள், காவலர்கள், துணை ராணுவத்தினர் உள்பட துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்புடன் அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

பெரம்பலுார்
வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Intro:பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான வே சாந்தா முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது

Body:தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது இதனிடையே வாக்கு பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி உள்ள 332 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதிப்படுத்து இயந்திரம் உள்பட 996 இயந்திரங்கள் வாக்குப்பதிவு தேவையான பொருட்கள் ஆகியவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வே சாந்தா முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் காவலர்கள் துணை ராணுவத்தினர் உள்பட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Conclusion:இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அந்த வாக்கு பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.