பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “
“தமிழ்நாடு மக்களுடைய உரிமைகளை டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டு, மோடி அரசின் அடிமையாக ஊழலில் மட்டும் உழன்று கொண்டிருக்கின்ற எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தூக்கி எறிவதற்கு மக்கள் கிளர்ந்து எழுந்து இருக்கிறார்கள் என்பதை இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உணர முடிகிறது.
தமிழ்நாடு மட்டுமல்ல, அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் மதச்சார்பின்மையை, அரசியல் சட்டத்தில் உள்ள மாண்புகளை காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டு மக்கள் இன்று உணர்ச்சிப் பிழம்பாக எழுந்திருக்கிறார்கள்.
இந்த உணர்ச்சிகளின் உச்சமாக தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் ஆட்சி அமைப்பார்” என்றார்.
ஆ. ராசா வாக்களித்த பின்னர், அவருடன் திமுக நிர்வாகிகள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி