பெரம்பலூர்: பெரம்பலூர் 8 ஆவது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் அருட்செல்வி காட்டு ராஜா. இவர் இரண்டரை ஆண்டுகளாக பதவியில் வகித்து வருகிறார். இந்நிலையில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அருட்செல்வி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தாங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஆனால் ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திட்டப் பணிகளுக்கு பில் போட மறுப்பதாகவும் தெரிவித்தார். கோரிக்கை மற்றும் திட்டப் பணிகள் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்க மறுப்பதை கண்டித்து அவர் தர்ணாவில் ஈடுபட்டதாக கூறினார்.
இந்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு கொடுத்துள்ளார். அதற்கும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் - 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்