ETV Bharat / state

1.7 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்கம் - 1.7 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

பெரம்பலூர்: ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 440 குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகளை இரண்டாம கட்டமாக வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் சாந்தா தொடங்கிவைத்தார்.

distribute deworming tablets for 1.7 lakh children in perambalur

author img

By

Published : Sep 15, 2020, 3:07 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரிடம் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 440 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கத் தேவையான மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் இரண்டாம் கட்ட பணிகளை தொடங்கிவைத்தார்.

இந்த மாத்திரைகள் 443 அங்கன்வாடி மையங்கள், 90 அரசு துணை சுகாதார நிலையம், 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 562 இடங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.

இப்பணியில் 90 மருத்துவ அலுவலர்கள், 87 கிராம சுகாதார செவிலியர்கள், 38 சுகாதார ஆய்வாளர்கள், 32 தன்னார்வலர்கள், 443 அங்கன்வாடி பணியாளர்கள் என 690 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 440 குழந்தைகள் பயனடைவார்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு குடற்புண் நீக்க மாத்திரை வழங்கி ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதாராணி மாவட்ட கல்வி அலுவலர்கள் மீனா மற்றும் குழந்தை ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.