மழைக்காலம் நெருங்குவதையொட்டி பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. இதனிடையே பெரம்பலூர் நகராட்சி மாவட்டக் காவல் துறை சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, புதிய பேருந்து நிலையம் வரை சென்றது. காவல் துறையினரும், நகராட்சி ஊழியர்களும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், நகராட்சி அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: Xi-Modi meet: சீனா-இந்தியா உறவு எப்படி இருக்கிறது ?