தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக வேலை மறுப்பு நலவாரிய பதிவில் புதிய நிபந்தனைகள் உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் ஊதியக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டுமானம், உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்ய ஒவ்வொரு தொழிலாளியும் கட்டாயமாக தொலைபேசி வைத்திருந்து அது ஆதார் அட்டையில் பதிவு செய்யவேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும்.
வேலைநீக்கம், ஊதியக் குறைப்பு செய்யக்கூடாது. இந்திய மக்களின் பொதுச் சொத்தான பொதுத்துறைகளை தனியார்மயப்படுத்தும் சீரழிவு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பெரம்பலூர் பணிமனை, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் வேப்பந்தட்டை, பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் ஆகிய நான்கு வட்டங்களிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சிஐடியு தொமுச உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம்
பெரம்பலூர்: தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக ஊதியம் குறைப்பு, வேலை மறுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.