தமிழ்நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்காக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை ஐந்து பேர் கரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் துப்பரவுப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வி.களத்தூர் ஊராட்சியில் துப்பரவுப் பணியாளராக பணியாற்றி வரும் அய்யாதுரை என்பவரின் தாய் அங்கம்மாள் நேற்று மாலை உடல் நிலை குறைவால் உயிரிழந்தார். தாயின் இறுதிச் சடங்கு முடித்த கையோடு உடனடியாக கரோனா தடுப்பு தூய்மைப் பணியில் அய்யாதுரை ஈடுபட்டுள்ளார். இதை வியந்து பார்த்த பொதுமக்கள், அவரைப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கேள்விலாம் கேக்காத நா பதில் சொல்லுவேன்' - காவலர்களுடன் அதிமுக பிரமுகர் ரகளை