ETV Bharat / state

வேலூர் தேர்தலில் அதிமுக படுதோல்வியடையும்- கே.பாலகிருஷ்ணன் - k.balakrishnan

பெரம்பலூர்: வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்
author img

By

Published : Jul 31, 2019, 11:20 PM IST

பெரம்பலூரில் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என்றும், மத்திய அரசு தாக்கல் செய்யும் சட்ட மசோதாக்களில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் கூறினார். மேலும், தேசிய புலனாய்வுத் துறை அமைப்புக்கு முழு அதிகாரம் வழங்கி அதன்மூலம் அரசியல் எதிரிகளை ஒடுக்க மத்திய மோடி அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.

கே.பாலகிருஷ்ணன்

மத்தியில் மோடி அரசு பதவி ஏற்ற ஒன்றரை மாதத்தில் எதிர்க்கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் நாடாளுமன்றத்தில் 22 மசோதாக்களை நிறைவேற்றி உள்ளதைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

.

Intro:வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என்று பெரம்பலூரில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேட்டி

Body:பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே பாலகிருஷ்ணன் கூறியதாவது வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என்று தெரிவித்தார் மேலும் மத்திய அரசு தாக்கல் செய்யும் சட்ட மசோதாக்களில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டினார் மேலும் தேசிய புலனாய்வு துறை அமைப்புக்கு முழு அதிகாரம் வழங்கி அதன் மூலம் அரசியல் எதிரிகளை ஒடுக்க மத்திய மோடி அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார் மத்தியில் மோடி அரசு பதவி ஏற்ற ஒன்றரை மாதத்தில் எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் பாராளுமன்றத்தில் 22 மசோதாக்களை நிறைவேற்றி உள்ளதை கண்டித்து வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கே பாலகிருஷ்ணன் தெரிவித்தார்

Conclusion:இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடைய மாவட்ட செயலாளர் செல்லத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் பேட்டி கே பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.