பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் பாடலூரை சேர்ந்தவர் சங்கர்(70) என்பவர் அனுமதிக்கப்பட்டார். இவர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று (மே.8) கரோனா சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு அறையில் உள்ள கம்பியில் துண்டால் கழுத்தில் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார்.
உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.