ETV Bharat / state

கரோனா: இரண்டு கிராமங்களுக்கு சீல் - corona affected region blocked for safety measure

பெரம்பலூர்: கரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்த பாளையம், விகளத்தூர் கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

கரோனா: இரண்டு கிரமத்திற்கு சீல்!
கரோனா: இரண்டு கிரமத்திற்கு சீல்!
author img

By

Published : Apr 22, 2020, 11:08 AM IST

கரோனா வைரஸ் நோய் தொற்று தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் இதுவரை ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனுக்கும், 46 வயது மதிக்கத்தக்க தலைமை காவலருக்கும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது

சீல் வைக்கப்பட்ட கிராமம்
சீல் வைக்கப்பட்ட கிராமம்

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் 672 பேருக்கு சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 150 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மீதமுள்ள 522 நபர்களின் ஆய்வு முடிவுகள் விரைவில் வரும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா: இரண்டு கிரமத்திற்கு சீல்!

இந்நிலையில் பாளைம், விகளத்தூர் ஆகிய இரண்டு கிராமங்களிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அவர்களுடன் தொடர்பு இருந்தவரிடம் வீடு வீடாக சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அந்த இரண்டு கிராமத்திற்குள் மக்கள் நுழையவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: சமூக இடைவெளியுடன் முத்தப் போட்டி... கடை திறப்பில் ருசிகரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.