பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டம். பருவ மழையை விவசாயம் நடக்கும் இங்கு, மானாவாரி நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. ஆலத்தூர் வட்டத்தில் அதிகளவு சின்ன வெங்காயமும், பெரம்பலூர், வேப்பந்தட்டை , குன்னம் ஆகிய வட்டங்களில் பருத்தி , மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுள்ளன.
இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழை காரணமாக அறுவடை செய்யப்படும் நிலையில் உள்ள மக்காச்சோளம், மீண்டும் முளை விட்டு, எதற்கும் உதவாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடன் வாங்கி மக்காச்சோளம் பயிரிட்டுள்ள செய்துள்ள நிலையில், தற்போதைய தொடர் மழையால், மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, தங்களை பாதிப்பிலிருந்து மீட்க இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே ஆதீண்டு கல் புதுப்பிப்பு!