தனியார் பள்ளிகளில் முழு கல்விக் கட்டணத்தையும் கேட்டு தொந்தரவு செய்தால் புகார் தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் நீதிமன்ற தீர்ப்பு ஆணையின்படி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதையும் மீறி தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் கேட்டு பெற்றோரை வற்புறுத்தினால், பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் மீது ceopsgrievance@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 97860 26745 என்ற தொலைபேசி எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும், பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.