பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பறித்து தனியாருக்கு விற்கும் மின்சார சட்டத் திருத்தம் 2020 திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை முடக்கி எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தக் கூடாது, விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதற்கான பண்ணை வர்த்தக சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.