பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நித்யா. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரிந்துவந்தார். இவரது கணவர் கண்ணன் வெளிநாட்டில் வசித்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று (செப். 24) நித்யா கல்லூரியிலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பாளையம் பகுதி அருகே எதிர்பாராதவிதமாக வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
அப்போது அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட அருகில் இருந்தவர்கள் உடனே பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நித்யாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (செப். 24) உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து பெரம்பலூர் நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: குளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!