பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேவுள்ள இறையூர் அரசு சர்க்கரை ஆலையில் ரூபாய் 138 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் 18 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையம், நவீன மயமாக்கப்பட்ட சர்க்கரை ஆலை இன்று திறக்கப்பட்டது.
இதனை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பெரம்பலூர் சர்க்கரை ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, பெரம்பலூர் சட்டபேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும், சர்க்கரை ஆலை திறப்பிற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இணைந்து கல்வெட்டை திறந்து வைத்தும், குத்துவிளக்கேற்றியும் ஆலையைத் திறந்து வைத்தனர். இவ்விழாவில், சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகிகள், விவசாய பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:அரசு பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்!