ETV Bharat / state

பெரம்பலூரில் பயங்கர விபத்து: இருவர் பலி; 25 பேர் படுகாயம்! - Perambalur district news

பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம், கார்கள் மற்றும் பயணிகள் வேன் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

சினிமாவை மிஞ்சிய வாகன விபத்து - பெரம்பலூரில் பயங்கரம்!

author img

By

Published : Jan 4, 2023, 10:42 AM IST

பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம், கார்கள் மற்றும் பயணிகள் வேன் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்

பெரம்பலூர்: திருச்சி மாவட்டம் இருங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டைட்டஸ். இவரும் தொண்டமாந்துறையை சேர்ந்த சிவா மற்றும் அன்னமங்கலத்தை சேர்ந்த ராபின் ஆகிய மூவரும் பைக்கில் சென்னையிலிருந்து இருங்களூர் நோக்கிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மூனுரோடு மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இவர்களுக்குப் பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது தூக்கி வீசப்பட்ட பைக், சென்டர் மீடியனைத் தாண்டி எதிர்புறத்தில் வந்து விழுந்தது. அதேவேகத்தில் காரும் சென்டர் மீடியனை தாண்டி எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்களின் மீது லேசாக மோதியது. மேலும் மூன்றாவதாக மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற வேனின் முன்பக்கத்தில் வேகமாக மோதியது. இதனால் பயணிகள் வேன் கவிழ்ந்தது.

மேலும் மோதிய காரும் அப்பளம் போல நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், பைக்கில் வந்த டைட்டஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த சிவா மற்றும் ராபின் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அதேபோல் காரை ஓட்டி வந்த, சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பிரவீன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருடன் வந்த அவரது சகோதரர் பிரகாஷ் மற்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கெவின் வெங்கடேஷ் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து பயணிகள் வாகனத்தில் வந்த பக்தர்களில் வேன் ஓட்டுநர் பத்மநாபன் உள்பட 27 பேர் லேசான காயமடைந்த நிலையில், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகரக் காவல் துறையினர், உடனடியாக போக்குவரத்தைச் சீர் செய்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Cuddalore Accident: அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.