பெரம்பலூர் மாவட்டம் மணியாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார் மற்றும் வேல்முருகன். இவர்கள் இருவரும் செட்டிகுளம் சென்றுவிட்டு ஆலத்தூர் பிரிவு சாலையில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து சபரிமலை செல்வதற்காக அதிவேகமாக வந்த கார், அவர்களின் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் காவல்துறையினர், உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை: பொதுமக்கள் சாலைமறியல்