பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர் இருசக்கர வாகன ஷோ ரூமில் மேலாளராக பணிபுரிகிறார்.
இவரது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 5 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாய் பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து முரளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர் வீட்டில் திருட்டு!