பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி. இவருக்கு இன்று (நவம்பர் 10) காலை பிரசவ வலி வந்தபோது 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜானகியை மருத்துவனைக்கு கொண்டுசெல்லும்போது வழியிலே சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், மருத்துவச் சிகிச்சைக்காக ஜானகி மற்றும் குழந்தையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் இனி ஷாப்பிங் செய்யலாம்...!