பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில்
1. மின்சார திருத்த சட்டம்
2.அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம்
3. வேளாண் விளை பொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசரச் சட்டம்
4. விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் & வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் விவசாய சங்கங்கள், திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.