ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் விழா, ஆசிரியர் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினவிழா அன்று தமிழ்நாடு முழுவதும் கல்விப் பணியில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ’நல்லாசிரியர் விருது’ தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.
இதனிடையே இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள பாரத சாரணியர் இயக்கம் பயிற்சிக் கட்டடத்தில் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சாந்தா பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தனர். பெரம்பலூரில் விருது வென்ற ஆசிரிய, ஆசிரியைகளின் விவரங்கள் பின்வருமாறு:
1. கோ .கண்ணன்_ தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கவுள்பாளையம்.
2. சீ. அறி வேந்தன் _முதுகலை ஆசிரியர், நேரு மேல்நிலைப்பள்ளி, எறையூர்.
3. மு.ஜோதிவேல் _சிறப்பு ஆசிரியர், (நெசவு) அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பலூர்.
4. க. இராஜம்மாள்_ தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, லப்பைக்குடிகாடு
5. சி .புஷ்பா மேரி _இடைநிலை ஆசிரியர், ஆர் சி பாத்திமா தொடக்கப் பள்ளி, பெரம்பலூர்
6. இரா .அருள்செல்வி_ தலைமை ஆசிரியை, தந்தை ரோவர் தொடக்கப்பள்ளி, இந்திராநகர், எளம்பலூர்
7. நூ .ஜூ னை தா_தலைமை ஆசிரியை, மௌலானா மானிய தொடக்கப்பள்ளி, மதரஸா ரோடு, பெரம்பலூர்
8. சூ .ஆரோக்கிய செல்வி _இடைநிலை உதவி ஆசிரியை, ஆர்சி சிறுமலர் தொடக்கப்பள்ளி, அண்ணமங்கலம்
9. த .தாமஸ் மரியசெல்வம் _முதல்வர் புனித ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமாந்துறை,
இவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை மாவட்ட ஆட்சியர் சாந்தா வழங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.