ETV Bharat / state

'மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்' - The struggle of the Marxist Communist Party

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தினையும், மின்கட்டண உயர்வினையும் வாபஸ் பெறாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்தை நடத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம் வாபஸ் பெற வேண்டும்-பாலகிருஷ்ணன் விளக்கம்

author img

By

Published : Dec 4, 2022, 9:07 PM IST

பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாவட்டச்செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'மாநில அரசாங்கத்திற்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

அதேபோல மத்திய அரசு சார்பில் மின்சார திருத்தச் சட்டத்தினை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து அதனை நிறைவேற்ற மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மத்திய அரசு மின்சார திருத்த சட்டம் அமலுக்கு வந்தால், மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்டுவிடும், ஏழை எளிய மக்கள், சிறு தொழில் நடத்துபவர்கள் மற்றும் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தச் சட்டம் அமலுக்கு வரும் நாளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிகப் பெரிய அளவிலான போராட்டத்தையும் முன்னெடுப்போம்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ’பாஜகவுடன் ஆளுநர் கைகோர்த்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறார். இதனையும் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தி கொடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் பேட்டை துவங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணன், ’பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி பகுதியில் சின்னமுட்லு அணை கட்டும் திட்டத்தினை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படுமானால் ஏராளமான விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பினை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. காசியில் தமிழ் மொழியை பற்றி உயர்வாகப்பேசியுள்ள மத்திய அமைச்சர்கள், பிரதமர் ஆகியோர் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு ஏற்பாடு செய்து வருவதை கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதிலிருந்து மின் கட்டண உயர்வுக்குத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆதார் இணைப்பு மூலம் எந்த விதமானப் பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தாலும், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதை நிறுத்துவதற்கு உண்டான முயற்சியாகக் கூட இருக்கலாம் என்று நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறோம்.

அதுபோல அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு, மூன்று வீடுகள் உள்ள இடங்களில் பொது (காமன் சர்வீஸ்) மின் இணைப்பிற்கு வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிப்பதையும் கண்டிக்கிறோம். மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்வதை தடுத்து, மாதம்தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்து வசூல் செய்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்.

ஒருவேளை மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தினையும் மின்கட்டண உயர்வினையும் வாபஸ் பெறாவிட்டால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும்’ என்று தெரிவித்தார்.

மேலும், ‘நாங்கள் பலமுறை மதுக்கடைகளை மூட வேண்டும், விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். நீதிமன்றமும் அதற்கான ஆணைகளைப் பிறப்பித்து இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூட இதனைத் தெரிவித்து இருக்கிறது. எனவே, மது விற்பனையினை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரூர் கம்பெனி என்ற பெயரில் பல்வேறு சீர்கேடுகள் நடைபெறுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எனவே, அரசுக்கு வருமானம் வருவதைத் தடுத்து கரூர் கம்பெனி என்று தனியாக நடத்துவது என்பது ஏற்புடையதல்ல. இதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

இதையும் படிங்க:மசோதாவில் கையெழுத்து: நேரம் எடுத்து கொள்ளலாம் - ஆளுநர் தமிழிசை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.