தேசிய ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை சார்பாக ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் மூலிகைகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டன. மேலும் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வது குறித்து விளக்க உரைகளும் பேசப்பட்டன.