தென்னிந்திய அளவிலான ஜீனியர் அத்லெட்டிக் விளையாட்டுப் போட்டிகள், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த செப் 14 ஆம், 15 ஆம் தேதிகளில் நடைபெற்றது. தமிழ்நாடு அளவில் நடைபெற்ற போட்டியில் தகுதிபெற்று தென்னிந்திய போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் பலர் பதக்கங்கள் வென்றுள்ளனர். இதில், 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவி பிரிய தர்ஷினி, ஈட்டி எறிதல், 3 கி.மீ தூர நடைப்பயிற்சி ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
மேலும் 18 வயது பிரிவில் 1500 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் மாணவி கிருத்திகா வெண்கலம் பதக்கமும், 20 வயது பிரிவில் 4 x 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலமும் என மொத்தம் நான்கு பதக்கங்களை மாணவிகள் வென்றுள்ளனர்.
தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், தடகள பயிற்றுநர் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.