பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்களின் குழு தலைவர் செம்மலை தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலில் பொதுத்துறை சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், சர்க்கரை ஆலையில் அரவை பணிகள், கூடுதல் மின்சாரம் தயாரிக்கும் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள மருத்துவத் துறையில் மருந்து கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், இறுதியாக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனை அருகே ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மருத்துவ கூடுதல் கட்டடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் சட்டமன்ற பேரவை நிர்வாக குழுவின் செயலர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் சாந்தா, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன், பிச்சாண்டி, மகேஷ் பொய்யாமொழி, சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
இதையும் படிக்க:தண்ணீர் இல்லாத பொதுக்கழிப்பறை - மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!