ETV Bharat / state

தீபாவளிக்கு 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்.. ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்..! - போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர்

diwali special bus: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, கூடுதலாக 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், ஆம்னி பேருந்துகளில் 30 சதவீதம் கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தீபாவளி முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 8:07 PM IST

போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டி

பெரம்பலூர்: தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண் சிறப்பு கண் மருத்துவமனைகளைத் திறந்து, சலுகை விலையிலும், காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவும் ஏழை எளிய மக்களுக்குக் கண் சிகிச்சை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது

அந்தவகையில், பெரம்பலூரில் மேக்ஸி விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை திறப்பு விழா இன்று (நவ.6) நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு மருத்துவமனை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தஞ்சாவூரைத் தொடர்ந்து தற்போது பெரம்பலூரில் இந்த மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் இந்த மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. இம்மருத்துவமனை பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பயனடையும் வகையில் அமையும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கக் கோரி தமிழக அரசுக்குக் கடிதம்..!

தொடர்ந்து பேசிய அவர், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகள் 9ஆம் தேதி முதல் இயக்கப்படும், பொதுமக்கள் எந்தவித சிரமம் இல்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்து கண்டன உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "அதேபோல ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு தடை செய்யும் வகையில், வழக்கமான கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் குறைந்த கட்டணம் வசூலிக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 25 சதவீதம் இருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தி 30 சதவீத குறைவான கட்டணம் வசூலிக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சென்னை- நெல்லை இடையே 'கரீப் ரத்' சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.