ETV Bharat / state

முதலமைச்சர் மனைவி போன்று அனைவரையும் வழிபாடு செய்ய அனுமதிக்க வலியுறுத்தல் - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் மனைவி போன்று அனைத்து பக்தர்களையும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

'அனைத்து பக்தர்களையும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும்'

author img

By

Published : Oct 12, 2021, 6:33 AM IST

பெரம்பலூர்: பெரியசாமி மலைக்கோயிலில் 14 சுடுமண் சுவாமி சிலைகள் கடந்த 5ஆம் தேதி உடைத்துச் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட சிலைகளை நேற்று (அக்.11) இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், "பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சிலைகளை உடைத்ததற்குக் காரணம் என்ன? எந்தக் காரணத்திற்காக இதனைக் கைதானவர் செய்திருக்கிறார்? சிலைகளுக்கு அடியிலிருந்த விலை உயர்ந்த எந்திரத் தகடுகளை எடுப்பதற்காகத்தான் இந்தக் காரியத்தை செய்தார் என்று புலன் விசாரணையில் தெரியவருகிறது.

'அனைத்து பக்தர்களையும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும்'

இருப்பினும் இந்தச் சிலை உடைப்புச் சம்பவத்தைக் கேட்டு இந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி வேறு சில மாவட்டங்களிலும் இது மாதிரியான சிலை உடைப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற பாரம்பரியமிக்க கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலினை அனுமதித்ததைப் போல் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஓடைகளில் வெள்ளப்பெருக்கு : போக்குவரத்து துண்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.