பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு இணைந்து நடத்திய அனைத்து வங்கி வாடிக்கையாளர்களின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இவ்விழா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அனைத்து வங்கிக் கிளைகளும் விவசாயக் கடன், பயிர் கடன், கறவை மாடு கடன் உள்ளிட்ட கடன்களை வழங்குகின்றன. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், விவசாயக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் என பல்வேறு வகையில் அனைத்து வங்கிகளின் மூலம் 468 பயனாளிகளுக்கு ரூ.14 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள கடன் உதவிகளை அவர் வழங்கினார்.
இந்த விழாவில் இந்திய ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் அங்கிட ரத்னா பாத் ரோ உள்ளிட்ட வங்கி உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் அனைத்து வங்கி சார்பில் ஸ்டால்கள் அமைத்து வங்கியின் பணிகள், சேவைகள், கடனுதவிகள் குறித்து வங்கி அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர். இந்நிகழ்வு நாளையும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க : 27 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு