பெரம்பலூர்: நகராட்சித் தேர்தல் பரப்புரை களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதான கட்சி வேட்பாளர், சுயேச்சை வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்துவருகின்றனர்.
இந்த நிலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் போஸ் வெங்கட் இன்று (பிப்ரவரி 15) பெரம்பலூரில் பரப்புரை செய்தார். 7ஆவது வார்டு, 10ஆவது வார்டு, 11ஆவது வார்டு, 12ஆவது வார்டு, 21ஆவது வார்டு ஆகிய பகுதிகளில் நடிகர் போஸ்வெங்கட் வீதி வீதியாகச் சென்று திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்தார்.
அப்போது உலகமே உற்று நோக்கக் கூடிய வகையிலும், இந்திய அரசியல் அரங்கமே திரும்பிப் பார்க்கக்கூடிய வகையிலும் தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி நடத்திவருவதாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும் மு.க. ஸ்டாலின் 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும், உள்ளாட்சிப் பகுதிகளிலில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த வாக்குச் சேகரிப்பின்போது வேட்பாளர்கள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மற்ற கட்சியினர் நிழல்கூட என் மீது விழாது; திமுக கட்சிக்கும் கரை வேட்டிக்கும் துரோகம் விளைப்பவர்கள் கடைந்தெடுத்த துரோகிகள் - துரைமுருகன்