பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூர் குடிகாடு காலனி தெருவைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருடைய மனைவி அஞ்சலை (வயது 60). இவர் அருகில் உள்ள பரவாய் சமத்துவபுரம் பகுதி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவ்வழியாக செல்லும்போது மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது தற்கொலையா அல்லது வேறு எதுவும் காரணமா என குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பழம் பெரும் நடிகர் ஸ்ரீராம் லக்கு காலமானார்!