பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி , பாடாலூர், அன்னமங்கலம், முருக்கன்குடி, கீழகணவாய், வெண்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்டவை அதிக அளவில் வசித்து வருகின்றன.
இதனிடையே மான்கள் மக்கள் வாழும் இருப்பிடத்திற்கு செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் வாகனங்கள் மோதி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது.
இதனிடையே பெரம்பலூர் அருகே சித்தளி வனப்பகுதி அருகே சாலையைக் கடக்க முயன்ற 2 வயது புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
உயிரிழந்த மானின் உடலைக் கைப்பற்றிய வனத்துறையினர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுத்தைகள் இடையே மோதல்: 3 வயதுள்ள பெண் சிறுத்தை உயிரிழப்பு